கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மார்க்கெட்டிங் பிரிவில் வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கணேஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.