
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சி இல்லாமல் மக்கள் விரக்தியில் இருப்பதாகவும், வரும் தேர்தலில் ஆம் ஆத்மி அவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கும் என்றும் கூறினார்.
மேலும் குஜராத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 13 சதவீத வாக்குகள் மற்றும் 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. குஜராத் மக்களின் ஆதரவால் பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி என்றாலே அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.