நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்கள் எதிர்கட்சிகளின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், இன்று 18 எதிர்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். அதன்படி அதானி விவகாரம் உள்ளிட்ட பல விவாதங்களை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.‌

மறுபுறம் லண்டனில் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து தவறாக பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. மேலும் அமளியால் ஏற்கனவே 2 நாட்கள் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3-வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது. இன்றைய நிகழ்வு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பாஜக மற்றும் எதிர் கட்சிகளின் முழக்கத்தினால் மதியம் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.