இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் பயணங்களையே அதிக அளவில் விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் மிகவும் சௌகரியமாக இருக்கும் என்பதால் ரயில் பயணத்தை தான் பெரும்பாலான பயணிகள் விரும்புவார்கள். இந்நிலையில் ரயில் பயணத்தில் கொரோனா காலத்திற்கு முன்பு வரை மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் ரயிலில் ஏசி மற்றும் இரண்டாம் வகுப்புகளை தவிர்த்து மச்சான் அனைத்து பெட்டிகளிலும் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என மத்திய நிலைக்குழு இந்திய ரயில்வேக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதனால் விரைவில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயிலில் சலுகைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.