கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பற்றிய செய்திகள் எப்போது வெளியாகும் என காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 7வது ஊதியக்குழுவுக்கு பதில் 8வது ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட உள்ளதாக சில செய்திகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 7வது ஊதியக்குழுவுக்கு பதில் அரசு 8-வது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

தற்போது வெளியாகி இருக்கும் செய்தி மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மீண்டும் 8வது ஊதியக்குழு பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பொதுவாக அரசு ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை ஊதியக்குழு விதிகள் மாற்றப்படுகிறது. 8-வது ஊதியக்குழு தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

எனினும் மத்திய அரசு அதற்கான பணிகளை தொடங்கி 2024-ம் வருடத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என சமீபத்திய தகவல்கள் கூறுகிறது. 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு மக்களவைக்கு முன்னதாக வெளியிடலாம் என சில அறிக்கைகள் கூறுகிறது. 2024ம் வருடம் லோக்சபா தேர்தலுக்கு முன்பே லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வெளியிடக்கூடும் எனவும் தேர்தல் முடிவுகள் வெளியாகி புது ஆட்சி அமைந்த பிறகு இதுகுறித்த பேச்சுவார்த்தை தீவிரமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது..