நீண்டகால திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால், மத்திய அரசின் லட்சிய திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (ppf) சிறந்த திட்டம் ஆகும். நீங்கள் ஏற்கனவே PPFல் முதலீடு செய்து இருந்தால் (அ) முதலீடு செய்ய நினைத்திருந்தால் உங்களுக்கான முக்கியமான தகவல் வெளியாகி இருக்கிறது. பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் மக்கள் வருடந்தோறும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரையிலும் முதலீடு செய்யலாம்.

அதோடு இந்த முதலீட்டில் நீங்கள் படிவம் 80Cன் கீழ் வரிவிலக்கு பெறலாம். இப்போது மத்திய அரசு PPF-க்கு வருடத்திற்கு 7.1% வட்டியை செலுத்தி வருகிறது. முன்பே குறிப்பிட்டுள்ளபடி ppf ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். ஆகவே வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 15 வருடங்களுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு புதுப்பித்தலிலும் முதிர்வு முடிந்தபின் 5 வருடங்களுக்கு கணக்கை தொடரலாம். இதனிடையே கூடுதலாக டெபாசிட் செய்யலாம் (அ) செய்யாமல் இருக்கலாம்.