அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இரு பாகங்களாக பிரம்மாண்ட படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளது. கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.

இதன் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தற்போது பொன்னியின் செல்வன் படக் குழுவினர் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.