விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் காவல் நிலையத்தில் இளங்கோ என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இளங்கோ அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இளங்கோ சிலரிடம் தகராறு செய்ததாக அந்த பகுதி மக்கள் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இளங்கோ குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தது உறுதியானது. அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா இளங்கோவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குடிபோதையில் தகராறு…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டாளே”… குடும்பத்தினர் கதறல்…. தீக்குளித்த பெண் தற்கொலை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் அடுத்த இராமநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு பிரியங்கா (35) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன்- பிரியா தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.…
Read moreமின்னல் தாக்கியதில் உயிரிழந்த மாணவன்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்….!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் சாலப்பட்டி கிராமத்தில் தங்கராசு வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(17) என்ற மகன் உள்ளார். திவாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராசு அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…
Read more