சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பெரியார் நகரில் எலக்ட்ரீசியனான படவேட்டான்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை காரணமாக படவேட்டான் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படவேட்டான் தனது அண்ணனும் திமுக கட்சி பெரம்பூர் தொகுதியின் கட்டிட பிரிவு தலைவருமான செட்டுவின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார் அங்கு படவேட்டான் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படவேட்டானின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் படவேட்டான் 8 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராமல் படவேட்டானை மிரட்டியுள்ளனர். இதனால் படவேட்டான் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.