கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒரு சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ள மாணவிகளுக்கு 13 ஆயிரம் ரூபாய்  கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு உங்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்சமாக 3,500 ரூபாய் இருப்பு தொகை இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு மணி நேரத்திற்குள் 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி அந்த மாணவியின் தந்தை செல்போன் கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பியுள்ளார். இதேபோல் அந்த மாணவியின் தோழிகள் 3 பேரும் பணம் அனுப்பி உள்ளனர். ஆனால் கூறியபடி அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவில்லை.

சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை பண்ருட்டி காவல் நிலையத்திலும், கடலூர் சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் உதவி தொகை தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.