அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாணதிரியான்பட்டிணம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராணிக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரனின் மனைவி அல்லிக்கும் இடையே பாதை பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதில் படுகாயமடைந்த அல்லியும், செல்வராணியும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் செல்வராணி, ரவி, அல்லி, ராமச்சந்திரன், திருமுருகன், நந்தகுமார் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.