தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டுப்பள்ளம் முனியப்பன் கோவில் எதிரே சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் இறந்துவிட்டார். இதனால் ருக்மணி வீட்டின் முன்பு ஒரு கடையில் மினி ரைஸ் மில் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ரைஸ் மில்லை மூடிவிட்டு ருக்மணி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த மர்ம நபர் ருக்மணியின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறிக்க முயன்றார். அப்போது வந்த மற்றொரு நபரும் சேர்ந்து ருக்மணியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ருக்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.