சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் வசந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அவசர தேவைக்காக 5 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகர பேருந்தில் ஏறி வசந்தி விஜயநகர் சந்திப்பில் இறங்கியுள்ளார்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ வசந்தியின் பையில் இருந்த பணத்தை திருடியதை கண்டு வசந்தி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வசந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.