விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி காம்ப்ளக்ஸ் கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.