காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர்களையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. இன்று காலை வேதாந்த தேசிகர் சுவாமி வீதி உலா வந்து வரதராஜ பெருமாள் கோவில் அருகே சன்னதி வீதியில் வடகலை, தென்கலை பிரிவினைச் சேர்ந்த ஏராளமானோர் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.

அப்போது பிரபந்தம் பாடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், கோவில் செயல் அலுவலரும் அங்கு விரைந்து சென்று இருதரப்பை சேர்ந்தவர்கள் சமாதானப்படுத்தி உள்ளனர். சன்னதி வீதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அடிக்கடி பிரபந்தம் பாடுவதில் அர்ச்சகர்கள் இடையே மோதல் ஏற்படுவதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.