சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட வேணுகோபால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் திருவொற்றியூர் ரயில்வே யார்டு அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேணுகோபாலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவரது சட்டை பையில் இருந்த அடையாள அட்டை மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.