கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரி உரிமையாளருக்கு போலீசார் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணலை ஏற்றி சொல்லக்கூடாது என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.