கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சம்பவம் நடைபெற்ற அன்று சிலம்பரசன் மாணவியை வீட்டிற்கு வரவழைத்து தனது பாட்டி காந்தி, தம்பி தங்கை ஆகியோர் முன்னிலையில் சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் தங்களது மகளை மீட்டு பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சிலம்பரசன், காந்தி உள்ளிட்ட 4 பேரும் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.