திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைப்பாதையில் வடகவுஞ்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பி.எல் செட் மலைப்பகுதியில் திடீரென நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி வனசரகர் குமரேசன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்களும், தீத்தடுப்பு குழுவினர்களும் சம்பவ இடத்திற்கு சென்று மலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈருபட்டுள்ளனர். சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டனர்.