கடலூர் மாவட்டத்தில் உள்ள சரவணபுரம் பகுதியில் 30 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டு தோட்டத்தில் இருக்கும் குளியல் அறையில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான குரு என்பவர் இளம்பெண் குளிப்பதை மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து குரு கவனிப்பதை அறிந்த இளம்பெண் அவரை தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த குரு, அவரது மனைவி ராணியுடன் இணைந்து இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குருவை கைது செய்தனர்.