விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருங்காப்பூர் கிராமத்தில் புத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். கூலி வேலை பார்க்கும் முருகன் பொன்பத்தி கிராமத்தில் இருக்கும் தனது நண்பரை பார்ப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது சக்கராபுரம் பூங்கா அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் முருகனிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது முகத்தில் மிளகாய் கொடியை தூவினர்.

உடனடியாக முருகன் கையில் அணிந்திருந்த 2 3/4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்த முருகன் தனது மோதிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முருகன் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 2 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.