இந்தியாவில் மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற அரசாங்க வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் நாட்டின் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்குவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் நடுத்தர வருவாய் குடும்பங்களுக்கு வீடு கட்ட அல்லது வாங்குவதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

இந்தத் திட்டத்தில் பயன் அடைய பல தகுதிகளும் உள்ளன. இந்த நிலையில் PMAY திட்டத்தில் விதிமீறல்களை தடுக்க மானிய விதியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக 35 லட்சத்துக்கு வாங்கப்படும் வீட்டுக்கு அளிக்கப்படும் 25 லட்சம் கடனுக்கான வட்டியில் நான்கு சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். முதலில் 12 ஆண்டுகளுக்கு வங்கிகளால் திருப்பி வசூலிக்கப்படும். 8 லட்சம் ரூபாய் கடனுக்கு இந்த வரி தள்ளுபடி வழங்கப்படும். இது ஐந்து ஆண்டு தவணைகளாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.