
இந்தியாவில் விவசாயிகளுக்கு என்று கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியின் புதிய திட்டமான பி எம் கிசான் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதாகும். மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த வேலைகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 17வது தவணையானது ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது வரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. கடந்த முறை KYC செய்தது போல, இந்த முறை e-KYC மற்றும் நிலப் பதிவுகளை சரிபார்ப்பு செய்யப்பட வேண்டியது கட்டாயம். செய்ய விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.