இந்தியாவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் 2 சிம்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒன்றை அழைப்புகள் மற்றும் டேட்டாவிற்காகவும், மற்றொன்றை அவசரநிலை பயன்பாட்டிற்காகவும் வைத்திருக்கின்றனர். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களில் ஏற்பட்ட விளைவு உயர்வைத் தொடர்ந்து, 2ம் நிலை சிம்களை  பராமரிப்பது பலருக்கும் கடினமாக உள்ளது.

இந்நிலையில் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) சிம்களை செயலில் வைத்திருப்பதற்கான செயல்முறையை எளிதாக்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ சிம் கார்டுகளில் ரூ.20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் நம்பரை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

அதேபோன்று ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை நம்பரை தக்க வைக்கும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில், ரூ.20 பிடித்தம் மூலம் மேலும் 30 நாட்களுக்கு வேலை செய்து வேல்டிட்டி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலிடிட்டி நீடிப்பானது பிஎஸ்என்எல் சிம்புகளுக்கு 180 நாட்கள் வரை நீடிக்கும் என்று TRAI அறிவித்துள்ளது.