கொரோனா பெருந்தொற்றில் பலரும் உயிரிழந்தார்கள். இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம்கேர் திட்டத்திலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் இதற்காக வந்த 51% விண்ணப்பங்களை ஒன்றிய மகளிர் குழந்தைகள் நல அமைச்சகம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது நாடு முழுவதும் இருந்து 9331 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 4781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.
