நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் பொது பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளும் இணைந்து டெல்லிக்கு சென்று எப்படி கோரிக்கைகளை வைத்தோமோ,  அதே போல இதையும் வைப்போம். பாஜகவினுடைய கூட்டணியில் இருக்கும் பொழுது தான் உங்களால் எதுவுமே பண்ண முடியவில்லை. இப்போதுதான் நீங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்று சொல்கிறீர்கள்.

அதுவும் தமிழ்நாட்டினுடைய உரிமையை காக்க தான் பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…  ஆகவே தமிழ்நாட்டினுடைய உரிமைக்காக… மாணவர்களுடைய கல்வி உரிமைக்காக… நீட் விலக்கிற்காக…  மாண்புமிகு குடியரசு தலைவரை  வலியுறுத்துகின்ற வகையில்…. இந்த கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில்  உங்கள் மூலமாகவும் அழைப்பு விடுக்கின்றேன்.

இது ஏதோ திமுகவின் உடைய பிரச்சனை என்று தயவு செய்து யாரும் நினைக்க வேண்டாம்.  இது தமிழ்நாட்டு மாணவர்களுடைய பிரச்சனை… தமிழ்நாட்டு உரிமையை காக்க  வேண்டும் என்கின்ற உணர்வோடும்… அதிமுக மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் இந்த கையெழுத்த்து இயக்கத்திலே பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீட் ஒழிப்பிற்கான இந்த கையெழுத்து இயக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியிருந்தாலும்…  இதனை மாபெரும் மக்கள் இயக்கமாகத்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்… நீட்டு தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் இடுகின்ற இந்த ஒவ்வொரு கையெழுத்தும்….. தமிழ்நாட்டு கல்வி உரிமை போராட்டத்தில் உயிர் எழுத்தாக என்றென்றும் நிலைத்திருக்கும் என பேசினார்.