தமிழர்களின் நாகரிகத் தொன்மையை உலகுக்கு உரக்கச் சொல்லும் சிவகங்கை மாவட்டம் கீழடியில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தேர்வுகள் முடிந்ததும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் நிச்சயம் இந்த அருங்காட்சியகத்திற்கு அழைத்து வர வேண்டும் என அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர்களின் பண்டைய காலத் தடங்களைத் தேடித் தேடி உலகிற்கு எடுத்துச் சொல்வோம் என்றும், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை இனி தெற்கில் இருந்தே எழுதுவோம் என்றும் முதல்வர் தனது பதிவில்  குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறையைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.