பொதுவாக நம் வீடுகளில் குளிர்சாதன பெட்டிகளில் ஏராளமான பொருட்களை வைத்து பயன்படுத்துவார்கள். அதில் குறிப்பிட்ட சில பொருட்களை பகுளிர்சாதன பெட்டிகளில் வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. அவை என்னென்ன உணவு பொருட்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். முதலாவது மூலிகைகள், கீரைகள். மூலிகைகளையும் கீரைகளையும் பிரிட்ஜில்  வைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவற்றின் சத்துக்கள் குறைந்துவிடும். சாதாரணமான சூழலில் நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுபகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்து இருந்தாலே போதும். தலதலவென்று உலர்ந்து போகாமல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

பூசணி, தர்பூசணி போன்ற நீர் சத்தம் மிக்க காய்கறிகளையும் பழங்களையும் கூட ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் இந்த வகை காய்,கனிகள் குளிரால் உடைந்து விடும். ஆனால் இவ்வகை காய்கறிகளை நறுக்கி நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம் என கூறப்படுகிறது. பிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தை கெடுப்பதோடு அழுகவும் செய்துவிடும். திறந்த உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது. குளிரில் தானும் கெட்டு பிரிட்ஜ் செய்யும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடுவது வெங்காயம்.

ஃப்ரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுகளையும் வெங்காயம் வழக்கத்திற்கு மாறாக மாற்றிவிடும். உலர்ந்த சூழலே வெங்காயத்துக்கு ஏற்றது. அதே நேரத்தில் உருளைக்கிழங்கிற்கு அருகே வைக்கக்கூடாது. உருளைக்கிழங்கிலிருந்து வெளியாகும் வாயுவும் ஈரப்பதமும் வெங்காயத்தை அழுக செய்துவிடும். முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உலர் கொட்டைகளையும் ஃப்ரிட்ஜில் வைக்க தேவையில்லை. குளிர்ந்த ஈரப்பதம் இந்த வகை நச்சுக்கள் உள்ளிட்ட பொருட்களை பாதித்தே கெட்டுவிட செய்யும். மீனையோ பேக் செய்யப்பட்ட மீன்களின் இறைச்சியையும் ஃப்ரிட்ஜில் பொதுவான இடத்தில் வைக்க வேண்டாம். மீன் நாற்றம் மற்ற பொருட்களுக்கு பரவி அவற்றின் தன்மை மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.