
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது சட்ட விரோதம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியரிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் 20 லட்சம் ரூபாய் இரண்டு தவணையாக லஞ்சம் பெற்றதாக ஆதாரப்பூர்வமான வீடியோ பதிவை வைத்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவர் தொடர்பான அலுவலகங்களில் சோதனையிட்டனர். குறிப்பாக மதுரையில் இருக்கக்கூடிய அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனையிட்டனர்.
அந்த சோதனையில் வரும்போது உரிய அடையாள அட்டை எடுத்து வரவில்லை. காவல்துறையினர் சீருடையில் வரவில்லை. காவல் துறையினர் திட்டமிட்டு அமலாக்க துறையை அலுவலகத்தில் சோதனை நடத்தி இருக்கிறார்கள் என தமிழக DGPயிடம் மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் முக்கியமான வழக்குகளை மத்திய அரசு நிறுவனமாக இருக்க கூடிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென்று உள்ளே புகுந்து சோதனையிட்டு முக்கியமான ஆவணங்களை எடுத்துச் செல்வும், தகவல் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. எனவே இது கண்டிக்கத்தக்க செயல். ஒருவர் தவறு செய்தால் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய நபர் மட்டும் முறைப்படி அனுமதி பெற்று முறைப்படி விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முழுவதுமாக சோதனை நடத்தி உள்ளார்கள்.
எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள் திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.