பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. பால், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் மாற்றியமைக்க வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தால் உள்ளூர் தொழில்கள், வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து தொழிற்துறை செயலாளர் உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்குகள் வருகிற ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.