பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் வருகையே முன்னிட்டு சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் உலா வந்தது. இதற்கு பிரதமரின் வருகையை ஒட்டி இன்று எந்த ரயில்களும் ரத்து செய்யப்படவில்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் அனைத்தும் அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.