நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதன்படி The Global Scholarship என்ற இணையதளத்தில் இந்திய அறிவியல் கழகம் சார்பாக பி எச் டி மாணவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகின்றது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு The Global Scholarship என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.