புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் இந்த வருடம் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 370 இடங்கள் காலியாக உள்ளது. அதில் அரசு பள்ளி மாணவர்கள் 37 பேர் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவம் படிக்கும் 37 மாணவர்களுக்கும் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு மூலமாக அடுத்த ஆண்டுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது