இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியை முடிப்பதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளது.

அதற்குள் ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும். மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான கால அவகாசமும் விரைவில் முடிவடைய உள்ளதால் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை விரைந்து மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் செப்டம்பர் 30-ம் தேதிக்கு பிறகு உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அது செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிரேடிங் மற்றும் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்களது நாமினியை நியமிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் உங்களது கணக்கு முடக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.