இந்தியாவில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது டிஎன் கிஷான் ரின் என்ற போர்ட்டல் விவசாயிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நாட்டின் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் கடன்கள் மற்றும் வட்டி விகிதம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களும் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலமாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான கடன் உதவிகளை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

அதேசமயம் பி எம் கிஷான் கிரெடிட் கார்டு கொண்ட விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் தொகையை குறைவான வட்டியில் பெறலாம் எனவும் விவசாயிகள் வெளிச்சந்தையில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதை தடுப்பதற்காக இந்த இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் என்ற இணையதளத்திற்கு சென்று கடன் தொவைக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.