PG மற்றும் விடுதிகளில் தங்குபவர்கள் இனி வாடகையுடன் 12% ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சிலின் கீழ் இயங்கும் கர்நாடகாவின் அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தனித்தனி சமையலறை வசதி இல்லாமல் ஒரு அறையை பலரும் பகிரும் விதமான அமைப்பு கொண்ட விடுதிகள், ‘குடியிருப்பு’ எனும் வட்டத்திற்குள் வராது.

எனவே, குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி வரி விலக்கு, விடுதிகளுக்கு பொருந்தாது என ஆணையம் கூறியுள்ளது. மேலும், தினசரி 1000-க்கு கீழ் வாடகைக்கு இருந்த வரி விலக்கு, கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது எனவும் விளக்கமளித்துள்ளது.