PF கணக்கு இருந்தால் எவ்வளவு ஓய்வூதியம் பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று உங்களுடைய பிறந்த தேதியை உள்ளிடவும். அதன் பிறகு பணியில் சேர்வது மற்றும் வெளியேறுவது உள்ளிட்ட சில தகவல்களை கொடுக்க வேண்டும். இப்போது 58 ஆண்டுகள் நிறைவடைந்த தேதி மற்றும் ஆரம்ப கால ஓய்வூதியத்திற்கான கணக்கிடப்பட்ட ஓய்வூதியம் தொடங்கும் தேதி காண்பிக்கப்படும். நீங்கள் விரும்பினால் 50 வயது முடிந்த பிறகும் ஓய்வூதியத்தை பெறலாம்.

அத்தகைய சூழலில் ஓய்வூதிய தொகை குறைக்கப்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இப்போது ஓய்வூதிய கால்குலேட்டரில் ஓய்வூதியம் தொடங்கும் தேதி மற்றும் ஓய்வூதிய சம்பளத்தை உள்ளிட்டு விவரங்களை பார்க்கலாம். இதற்குப் பிறகு நீங்கள் ஒவ்வொரு மாதமும் பெறும் ஓய்வூதியத்தின் மதிப்பை காண முடியும்.