அமேசான், பிளிப்கார்ட்டில் ரிபப்ளிக் சேல் துவங்கி உள்ளது. பிக் சேவிங் டேஸ் சேல் எனும் பெயரில் பிளிப்கார்ட்டில் இந்த விற்பனையானது நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை வருகிற 20 ஆம் தேதி வரை நடைபெறும். இவ்விற்பனையில் ஐபோன்-14 மற்றும்  ஐபோன்-13ல் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஐபோன் 14 பிளிப்கார்ட்டில் ரூ.66,999 ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் ஒரிஜினல் விலையானது ரூ.79,900 ஆக இருந்தது. மேலும் இந்த விற்பனையில் ஐபோன் 14ல் 12,901 பிளாட் தள்ளுபடியானது வழங்குகிறது. இது ஐபோனின் 128 gp ஸ்டோரேஜ் மாடலின் விலை ஆகும். அதோடு ஐபோன் 13-க்கும் தள்ளுபடிகள் இருக்கிறது. அந்த வகையில் பிளிப்கார்ட்டின் விற்பனையில் ரூபாய்.59,499 ஆரம்ப விலையில் ஐபோன் 13 பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விலை 128 ஜிபி மாடலுக்கும் இருக்கிறது.

அதே நேரம் ஆப்பிள் அதிகாரப்பூர்வமான தளத்தில் ஐபோன்-13 இன் விலை ரூ.69,900 ஆகும். அந்த அடிப்படையில் விற்பனையில் ஐபோன் 13-க்கு ரூ.10,401 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர்த்து 2 போன்களிலும் ரூ.1,000 தள்ளுபடி வங்கி அட்டை சலுகையும் வழங்கப்படுகிறது.