கோடாக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சலுகைகளை வழங்கி வருக்கிறது. கோடாக் நிறுவனம் இந்த விற்பனையில் தன் ஸ்மார்ட் டிவியை கம்மியான விலையில் விற்பனை செய்ய உள்ளது. இதில் Kodak CA Pro மற்றும் QLED தொடர் ஸ்மார்ட் டிவிகளில் சிறந்த தள்ளுபடி கிடைக்கும். Kodak CA PRO தொடர் சமீபத்திய Android 10 இடை முகத்தை பயன்படுத்துகிறது.

இது 4k HDR10 டிஸ்ப்ளே, DTS TrueSurround ஆகிய வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய பல்வேறு அம்சங்களைப் பெற்று உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் USB 2.0, HDMI 3 ARC / CEC மற்றும் புளூடூத் v.5.0 போன்றவற்றின் சமீபத்திய பதிப்பு இருக்கும்.  கூகுள் டிவி இயங்குதளத்து உடன், Kodak QLED TVகள் 3 அளவுகளில் (50-inch, 55-inch மற்றும் 65-inch) கிடைக்கும். இதன் ஆரம்ப விலையானது ரூபாய்.33,999 ஆகும். கோடாக் டிவி  நம் நாட்டின் பிரீமியம் பிராண்டாகும்.

இது கூகுள் டிவியில் க்யூ எல்இடியை அறிமுகப்படுத்தியது.  பண்டிகை காலங்களிலும் சிறப்பு தருணங்களிலும் அனைத்து ஆன்லைன் விற்பனை தளங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சலுகைகளை அள்ளி வீசுகிறது. வாடிக்கையாளர்களும் இந்த சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அவ்வப்போது சிறந்த வழியில் பயன்டுத்திக்கொள்கின்றனர்..