அ.தி.மு.க நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை தியாகராய நகரிலுள்ள தன் இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா கூறிருப்பதாவது, திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொல்வதை மட்டுமே செய்வார்கள். மக்களை ஒரு போதும் அதிமுக ஏமாற்றியது இல்லை. அதுபோல் வரும் காலங்களில் நன்றாக யோசித்து திமுக அரசு செயல்பட வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, ஆரம்பித்ததில் இருந்து என்னோட உக்திகளை பார்த்துட்டு இருக்கீங்க. இதுக்கு மேல நான் வெளியே சொல்ல கூடாது என கூறினார்.