நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏல மண்ணா பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை சுற்றி திரிகிறது. அந்த சிறுத்தை தாக்கியதால் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அந்த பெண்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஏலமண்ணா பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பந்தலூர் பள்ளிக்கு செல்ல அச்சம் தெரிவித்தனர். இதனால் வனத்துறையினர் தங்களது வாகனத்தில் மாணவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டனர். காலை, மாலை என இரு வேளைகளும் வனத்துறையினர் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருகின்றனர்.