இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் என்பது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மெசேஜ் அனுப்புவது போன்று வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி மோசடிகள் அரங்கேறுவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது. இதேபோன்று நாளுக்கு நாள் நவீன முறையில் மோசடிகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சமீபத்தில் பொங்கல் பண்டிகையின் போது வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி மோசடி அரங்கேறிய நிலையில், தற்போது ஈபி ஊழியர்கள் என்று கூறி ஆவணங்களைப் பெற்று மோசடி செய்கின்றனர். எனவே இபி பில் கட்டும் பயனாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. யார் மீதாவது சந்தேகம் இருப்பின் உடனே 9498794987 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.