திமுகவின் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், திருவண்ணாமலையில் எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகள்,  எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அது வெற்றி பெற்றே தீரும். இந்த மண்ணுக்கு அந்த மகிமை உண்டு. அப்பொழுதுதான் சொன்னார் ஒரு கூட்டத்தில் கலைஞர்…  தென்னாட்டு காந்தி என்று அண்ணாவை அழைத்தார். அதுவும் இந்த மண்ணில் தான்.

முதல் முதலாக அண்ணாவுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது. இது ரொம்ப முக்கியமான ஊர். இந்த ஊர்ல தான் பெரியார் ராஜாஜிய பார்த்து மணியம்மையை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டாரு. அதுவும் இந்த ஊருல தான் நடந்தது. ரொம்ப விவரமான ஊரு  திருவண்ணாமலை. ஆகையினால் அரசியலில், ஆன்மீகத்தில், வீரத்தில், விவேகத்தில் தெளிந்த ஊர் திருவண்ணாமலை. அந்த மண்ணிலே இன்றைக்கு நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள்.

எனவே இந்த ஆட்சியினுடைய கோலத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது இன்றைக்கு என்று ஒரு காலத்தில் கேட்ட  மக்கள் யாரும் நம்ம அப்படி கேட்கவில்லை. இன்றைக்கு நல்லாட்சி நடக்கிறது என்று பாராட்டுகிறார்கள். யாரும் முகம். சுளிக்கவில்லை. எல்லாருக்கும் எல்லாரும் கிடைக்கிறது.   எல்லோருக்கும் ஒரு வகையிலே ஒரு உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இல்லை என்று எவரும் சொல்லவில்லை என தெரிவித்தார்.