இந்தியாவின் சிறந்த பண பரிமாற்ற தளமாக கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட தளங்கள் உள்ளது. இந்த செயலியின் மூலமாக எந்தவித இடையூறும் இல்லாமல் எளிதில் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு paytm பேமெண்ட் வங்கியின் மூலம் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது சரியான அடையாள ஆவணங்கள் இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்களை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உருவாக்குவதன் மூலமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பேடிஎம் வங்கி உருவாக்கிய கணக்குகள் பலவும் போலியானவை என்றும் அந்த கணக்குகளை வைத்து பணம் மோசடிகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. எனவே தற்போது வரை பேடிஎம் பேமெண்ட் வங்கியில் பணத்தை சேமித்து வைத்துள்ளவர்கள் உடனே பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் அதனை வேறு வங்கிக்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 1 முதல் வங்கி மூலமாக எந்த பயனர்களும் எந்த கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.