ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தல பிரா அனல் மின் திட்டத்தை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த அரசு எந்த ஒரு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவது மட்டுமல்லாமல் தொடங்கி வைப்பதையும் உறுதி செய்கிறது என உரையாற்றினார். இந்த நிறுவனத்தின் மின் திட்டம் ஒடிசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 24 மணி நேரமும் மின் சேவையை வழங்குவது மட்டுமல்லாமல் அந்தப் பகுதி பட்டதாரி ஏளர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும்.

எரிசக்தி துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு சுமார் 27,000 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் நாட்டின் மிகப்பெரிய கிரீன் ஃபீல்ட் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒடிசா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு 1787 கோடி யூனிட் மின்சாரத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.