பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களை டைரக்டு செய்த மோகன் ஜி இப்போது இயக்கியுள்ள படம் “பகாசூரன்”. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்து உள்ளார்.

இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் மோகன் ஜி இப்படத்துக்காக சென்னையிலுள்ள சாலைகளில் போஸ்டர் ஒட்டும் புகைப்படமானது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து படத்துக்காக எளிமையாக அவரே போஸ்டர் ஒட்டியதை பாராட்டி வருகின்றனர்.