டைரக்டர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் “அகிலன்”. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச் சந்திரன் இரண்டு பேரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அகிலன் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் அகிலன் படம் வரும் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறது.
Happy to announce, #Agilan will be releasing worldwide on March 10th in theatres !!! God bless 🙏🏼#AgilanFromMarch10
@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @shiyamjack @vivekcinema @RVijaimurugan @Pallavi_offl @skiran_kumar @senthilkumarsmc pic.twitter.com/pWLPUi4fMu— Jayam Ravi (@actor_jayamravi) February 22, 2023