டைரக்டர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் “கிங் ஆஃப் கோதா”. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் சூட்டிங் தற்போது தமிழகத்தில் காரைக்குடியில் மும்முரமாக நடந்து வருகிறது. ஜேக்ஸ் பிஜாய், ஷான் ரஹ்மான் ஆகியோர் இணைந்து இசையமைக்கும் இந்த படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 வருடகால திரையுலக வாழ்க்கையை சிறப்பிக்கும் அடிப்படையில் கிங் ஆஃப் கோதா படம் 2023 ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அண்மையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் சூட்டிங் காரைக்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 95 நாட்கள் நடந்து வந்த நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதோடு கிங் ஆஃப் கோதா படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)