சென்னை சென்ட்ரலுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே சென்றபோது ஏசி பேட்டியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்தனர். அந்த ரயில் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தொழில்நுட்ப பணியாளர்கள் பெட்டிக்குள் சென்று மின்சார வினியோகத்தை துண்டித்தனர்.

இதற்கிடையே புகை வந்ததை பார்த்ததும் பயணிகள் ரயில் நின்றதும் இறங்கி அலறியடித்து ஓடினர். ஏசி பெட்டிக்கு வரக்கூடிய மின்சாரத்தில் ஏற்பட்ட கோளாறால் புகை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி மின்சார விநியோகத்தை துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பழுது சரி செய்யப்பட்ட பிறகு அறையில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.