திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சுற்றுலா பேருந்தில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தை விக்டர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் ஆரணி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நெசல் கூட்ரோடு அருகே சென்றபோது சாலையோரம் என்ற டிராக்டர் மீது சுற்றுலா பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.